நண்பரின் DUCATI பைக்கில் அஜித்குமார்.. கெத்து LOOK-ல் தோரணையான போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார், தனது நண்பரின் டுகாட்டி பைக்கில் இமயமலையில் ரைட் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | "தமிழ் சினிமால இந்த 4 இயக்குனர்களோட படத்துல நடிக்கனும்".. பிரபல பொன்னியின் செல்வன் நடிகை!

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித்குமார் தனது BMW பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வாடிக்கையான ஒன்று.

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத்  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. விசாகப்பட்டினம் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

தற்போது அஜித் குமார், இமயமலையில் உள்ள லடாக் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் குமார், பொள்ளாச்சி நகராட்சி 8வது வார்டு உறுப்பினர்,  வசந்த்தின் டுகாட்டி பைக்கில் ரைடு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. AK 61பட லுக்கில் ரைடிங் கியர் அணிந்து தோரணையாக அஜித் தோறறமளிக்கிறார். இந்த புகைப்படங்களை  கவுன்சிலர் வசந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | இமயமலையில் சாகச பைக் RIDE.. அஜித்துடன் இணைந்த பிரபல முன்னணி நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Drive Ducati Bike at Himalayas Ladakh

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK Drive Ducati Bike, Himalayas Ladakh will find this news story useful.