இயக்குனர் சிவாவுடன் வீடியோ காலில் பேசிய நடிகர் அஜித்.. பிரபல டெக்னீசியன் பகிர்ந்த EXCLUSIVE தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா.

Advertising
>
Advertising

ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் சிவா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் பூஜை கடந்த (21.08.2022) அன்று  நடைபெற்றது.

சிலநாட்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.  இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

 

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த  ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி துவங்கியது. திஷா பட்டாணி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு இந்த படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் சூர்யா நடிக்கும் இந்தப் படத்தின் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் அஜித்குமாரும் இயக்குனர் சிவாவும் வீடியோ காலில் பேசிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன.

ஏற்கனவே இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் குமார் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சிவாவுடன் வீடியோ காலில் பேசிய நடிகர் அஜித்.. பிரபல டெக்னீசியன் பகிர்ந்த EXCLUSIVE தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Director Siva Video Call Exclusive

People looking for online information on Ajith Kumar, Siva, Suriya42, Vedalam, Veeram, Viswasam will find this news story useful.