தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.
Also Read | சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் SURYA 42.. ஷூட்டிங் தமிழ்நாட்டில இந்த ஊர்லயா! செம்ம
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்திருந்தார்.
வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் தனது BMW பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செல்வதை வழக்கமாக கொண்டவர்.
நடிகர் அஜித், ஐரோப்பிய நாடுகளில் சில நாட்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித், துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
துணிவு படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு இடைவேளையில் நடிகர் அஜித், தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங், ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் & லே பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் கோயிலில் நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
துணிவு படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் நடிகர் அஜித் குமார், தற்போது வடகிழக்கு மாநிலங்களில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித், இன்றுடன் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பைக் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து விட்டதாக அவரது நண்பர் சுப்ரஜ் வெங்கட் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் உலக பைக் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய சுற்றுப்பயணம் அமைந்துள்ளது என குறிப்பிட்டு, உலக பைக் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டம் நிறைவடைந்தது என்றும் சுப்ரஜ் வெங்கட் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | ரஞ்சிதமே Promo பார்த்ததும் விஜய்யின் அலுவலகத்துக்கு போன ஷோபா .. அடுத்து நடந்த அல்டிமேட் சம்பவம்!