திருச்சியில் நடிகர் அஜித்.. இதுக்கு தான் வந்திருக்காரா? முழு தகவலுடன் வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.

Advertising
>
Advertising

Also Read | Koffee With Karan 7: "Husband இல்ல.. Ex Husband" - தவறை சுட்டிக்காட்டி திருத்தம் செய்த Samantha.!

நேற்று நடிகர் அஜித்குமார் சென்னைக்கு அருகில் உள்ள மொரை வீரபுரம் போலீஸ் பயிற்சி மைய அகாடமியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். அங்குள்ள காவலர்களிடம் அஜித் உரையாடும் வீடியோ  வெளியாகி வைரலானது.

இந்நிலையில் மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் ராணுவ ரிசர்வ் கேம்பஸில் நேற்று  (26.07.2022) துவங்கி உள்ளது.

இதற்காக நடிகர் அஜித் குமார் சென்னையில் இருந்து திருச்சி ரைஃபிள் கிளப் சென்றுள்ளார். அங்கு துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார். அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களை சந்தித்த அஜித், எதுவும் பேசாமல் பத்திரிகையாளர்களுக்கு வணக்கம் மட்டும் வைத்துவிட்டு, மகிழ்ச்சி, நன்றி என கையசைத்து விட்டு போட்டி நடக்கும் அரங்கினுள் சென்றுவிட்டார். காலையில் போட்டிகள் முடிந்ததும் நடிகர் அஜித் குமார் செனனை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

AK 61

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதேவேளையில் தமிழகத்தில் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது.

சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Also Read | "உண்மைலயே வந்துருச்சாயா?" - "ஆமாயா.." - தேசிய விருது .. சூர்யா & சுதா பேசிக்கொண்டது என்ன?

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK at Trichy KK Nagar Rifle Club

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar in Rifle Club, AK61, Trichy, Trichy KK Nagar Rifle Club will find this news story useful.