கார்கில் போர் நினைவிடத்தில் நடிகர் அஜித்குமார் மரியாதை.. தீயாய் பரவும் சூப்பர் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ஜன்னல் ஓரத்தில் சோகமாக சிம்பு.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய Countdown போஸ்டர்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது.

இந்த சென்னை படப்பிடிப்பு  காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார்.  இந்த சென்னை படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு  விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது.

விசாகப்பட்டினம் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் அஜித் தனது சக பைக் ரைடர்களுடன் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், லே பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

தற்போது இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு உள்ள போர் நினைவிடத்திற்கு சென்று போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | "காடெல்லாம் உன் அரசாங்கம்".‌. யுவன் இசையில் 'நானே வருவேன்' முதல் சிங்கிள் பாடல்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK at Kargil War Memorial Viral Photo

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK at Kargil War Memorial will find this news story useful.