அஜித் நடிக்கும் 'துணிவு'.. படத்தில் இணைந்த 'வலிமை' பட டெக்னீசியன்! இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் துணிவு படத்தில் பிரபல எடிட்டர் இணைந்துள்ளார்.

Ajith Kumar AK 61 Thunivu Movie Editior Vijay Velukutty
Advertising
>
Advertising

Also Read | AK61 படத்தின் FIRST LOOK போஸ்டருடன் வெளியான மாஸ் டைட்டில்..நடிகர் அஜித்தோட லுக் தீய்யா இருக்கு!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

Ajith Kumar AK 61 Thunivu Movie Editior Vijay Velukutty

இந்த படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

இந்த படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார் என அதிகாரப்பூர்வமாக போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் வேலுக்குட்டி ஏற்கனவே வலிமை படத்தின் எடிட்டராக பணிபுரிந்தவர். மேலும் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் எடிட்டராகவும் பணிபுரிகிறார்.

Also Read | AK61: அஜித் நடிக்கும் 'துணிவு'.. படத்தோட இசையமைப்பாளர் இவரா? போடு வெடிய!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK 61 Thunivu Movie Editior Vijay Velukutty

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK 61 Movie, AK 61 Movie, AK 61 Thunivu Movie, H Vinoth will find this news story useful.