அஜித் நடிக்கும் AK61.. படத்தில் இணைந்த பிரபல யூடியூப் நடிகை! வைரல் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தில் பிரபல இளம் நடிகை இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | Breaking : 'ஜெயிலர்' படத்தில் இணைந்த பிரபல ரஜினயின் மெகா ஹிட் பட நடிகை?..

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது.

இந்த சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது.  முக்கிய சாலைகளில் பரபரப்பான பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.

இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.  நடிகை மஞ்சு வாரியருடன் நடிகை பூஜா இருக்கும் புகைப்படம் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

AK61 படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சமீபத்தில் ஐயப்பனும் கோஷியும் படத்திற்கு தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணிபுரிகிறார்.

இந்த சென்னை படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன.  இந்நிலையில் பிரபல யூடியூப் புகழ் நடிகை புவனேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில்  "இந்த புகைப்படங்கள் கனவு நனவாகும் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷமான தருணங்களில் ஒன்றாகும்.

முதலில் இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் வினோத் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் அனைத்து உதவி இயக்குனர்களுக்கும் குறிப்பாக நன்றி

உங்கள் டீமுடன் இணைந்து பணியாற்றியதும், #ak61-ல் ஒரு அங்கமாக இருப்பதும், எனக்குப் பிடித்த ஹீரோ அஜித்குமார் சாருடன் நடிக்கவும் கிடைத்ததும் மற்றும் அவர் அனைவரையும் மரியாதையுடன் நடத்திய விதம் இன்னும் ஆச்சரியமாக உள்ளது.

உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி நிரவ்ஷா சார். மஞ்சுவாரியர், நான் எப்போதாவது ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தச் செல்லும் போது மிகவும் இனிமையாக இருந்தார், அவர் தனது நேரத்தை எடுத்து பொறுமையுடன் விளக்கினார்" என கூறியுள்ளார்.

ஐதராபாத் படப்பிடிப்பில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 

Also Read | BREAKING: சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? வேறமாரி அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK 61 Movie Shooting Spot BTS Images Bhuvaneshwari

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK 61 Movie Shooting, AK 61 Movie, Bhuvaneshwari will find this news story useful.