அஜித் நடிக்கும் AK 61.. பட ஷூட்டிங் சென்னைல இந்த ஏரியால தான் நடக்குதாம்! வேறமாரி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தின் படப்பிடிப்பு  தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | அடடே நஸ்ரியா நடத்துன போட்டோஷூட்.. அதுலேயும் ரசிகர்களிடம் அவங்க கேட்ட கேள்வி செம ஹைலைட்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது.

இந்நிலையில் இந்த சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.  தற்போது இன்று  (20.07.2022) மதியம் வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது. வெளிவட்ட சாலையில் இயக்குனர் எச்.வினோத் படக்காட்சிகளை இயக்கி வருகிறார்.

இந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Also Read | சந்திரமுகி-2 படத்துல ஹீரோயின் இவங்களா? ஆஹா அப்போ வேறலெவல் சம்பவம் கன்பார்ம்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK 61 Movie Shooting at Mannivakkam Vandalur

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK 61 Movie, AK 61 Movie, AK 61 Movie Shooting, H Vinoth will find this news story useful.