வைரலாகும் AK 61 படத்தின் BTS போட்டோ.. யார் யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தின் படப்பிடிப்பு BTS போட்டோக்கள் ரசிகர்கள் மூலம் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | அனிருத் வெளியிட்ட 'விக்ரம்' படத்தின் OST.. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிரட்டலான பின்னணி இசை!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார்.

இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜான் கொக்கன்  ரசிகருடன் எடுத்து கொண்ட BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சிலநாட்களுக்கு முன் AK61 படப்பிடிப்பில் பணியாற்றும் நபர்களுடன் நடிகை மஞ்சு வாரியர் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல்  துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது நடிகர் அஜித் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ளார்.

Also Read | NKP, ஜெய்பீம் வரிசையில் கார்கி.. சாய் பல்லவி நடிப்பில் வெளியான எமோஷனல் டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK 61 Movie John Kokken BTS Image

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK 61 Movie, AK 61 Movie, John Kokken will find this news story useful.