AK61: ஹாட்ரிக் வெற்றிக்கு ரெடியான அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி! செம மாஸா ஆரம்பமான ஷூட்டிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

Ajith Kumar AK 61 commences pooja and regular shooting today in Hyderabad
Advertising
>
Advertising

”ஷூட்டிங்குக்கு ரெண்டு நாள் முன்னாடி… என்ன பழிவாங்கன்னே”… மாளவிகா மோகனின் செம்ம status!

வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar AK 61 commences pooja and regular shooting today in Hyderabad

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK 61 படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் AK61 படத்தின் பூஜை இன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் இன்று முதல் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்காக படக்குழு ஐத்ராபாத் சென்றுள்ளது.

KGF Chapter 2 படத்தின் ஒரு FDFS டிக்கெட் இம்புட்டு ரூபாயா? வெளியான OFFICIAL தியேட்டர் கட்டண விவரம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK 61 commences pooja and regular shooting today in Hyderabad

People looking for online information on Ajith Kumar, AK61, Boney kapoor, H Vinoth will find this news story useful.