வலிமை ஸ்பாட்டில் அஜித்துடன் சந்திப்பு.. முக்கியமான விஷயத்தை உடைத்த தல!! ரசிகர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்தக்கட்டமாக வெளிநாட்டில் படத்தின் சேஸிங் காட்சியும் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் ரசிகர் ஒருவர், வலிமை படம் குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''நேற்று மாலை வலிமை படப்பிடிப்பில் அஜித் சாரை சந்தித்து, 10 நிமிடங்கள் உரையாடினேன். வலிமை அப்டேட் பற்றி அவரிடம் கேட்டபோது, பிப்ரவரி மாத இறுதியில் அப்டேட்கள் வரும் என்று தெரிவித்தார்'' என பதிவிட்டுள்ளார்.

மேலும் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

அஜித்தின் வலிமை பட அப்டேட் | Ajith h vinoth valimai movie update fans tweet goes viral

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Valimai, Valimai update will find this news story useful.