சபரிமலையில் 'வலிமை'.. வைரலாகும் அஜித் ரசிகர் செயல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை:  சபரிமலையில் வலிமை பேனர் உடன் அஜித் ரசிகர் ஒருவர் பிரார்த்தனை செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertising
>
Advertising

 


H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் தான் வலிமை.
ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டிவரும் இப்படம், சில மாதங்களாகவே சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாக இருந்து வருகிறது. இது மட்டும் இல்லாமல், இன்று வெளிவர இருக்கும் இப்படத்தின் "விசில் தீம்" பற்றிய கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பு

சினிமா ரசிகர்களால் அதிக அளவு எதிர்பார்ப்பில் இருக்கும் படம் தான் வலிமை. சில நாட்களாக வலிமை படத்தின் பல அப்டேட்கள் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. H.வினோத் இயக்கத்தில், அஜித்  நடித்துள்ள வலிமை திரைப்படம், 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ளது.'

சென்சார்

வலிமை  படம் விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல வலிமை படத்தை கொண்டாட ரசிகர்கள் சூப்பராக தயாராகி வருகின்றனர். இந்த படத்தில் அதிக அளவில் பைக் ஸ்டண்ட் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டி உள்ளது.


ஸ்டண்ட் காட்சிகள்

சமீபத்தில் அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் வீடியோக்கள் படக்குழுவால் வெளியிடப்பட்டது.  கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்தை பற்றி வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் "விசில் தீம்" இன்று 3:30 மணி அளவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆர்வம் அதிகம்

வலிமை படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் செயல்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றது. சமீபத்தில், அஜித் ரசிகர் ஒருவர் சபரிமலையில் வலிமை பேனருடன் படம் வெற்றி பெற வேண்டி  பிரார்த்தனை செய்தது  அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

உணவு இலவசம்

அதுமட்டும் இல்லாமல், பில்லா ஸ்டார் அஜித் ரசிகர்கள் சார்பில், இப்படத்தின் டீசர் வெளியீட்டை முன்னிட்டு,மதுரையில் உள்ள சர்தார் படேல் முதியோர் இல்லத்தில் மூன்று வேலையும் உணவு வழங்கப்படவுள்ளது. இது போல் பொது சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள். இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில், இந்த படமும் மெகா ஹிட்டாகும் என்று ரசிகர்களால் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Fans involved in public service in Madurai

People looking for online information on Ajithkumar, Valimai, Valimairelease, ValimaiUpdate will find this news story useful.