அஜித்தின் வலிமை அப்டேட் கேட்டு, ரசிகர்கள் செய்த விஷயம்... இணையத்தில் செம ட்ரெண்டிங்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் வித்தியாசமான செயலை செய்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட்க்காக நீண்ட நாட்கள் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர். அவ்வப்போது சோஷியல் மீடியாக்களிலும் அப்டேட் கேட்டு ட்ரெண்ட் அடித்து வந்தனர். 

இதனிடையே தற்போது அஜித் ரசிகர்கள், அப்டேட் கேட்டு, பழனி முருகன் கோவிலுக்கு விசிட் அடித்துள்ளனர். மேலும் இதற்காக ஒரு பிரத்யேக பேனர் அடித்து, ''வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லு முருகா'' எனவும் குறிப்பிட்டுள்ளனர் ரசிகர்கள். 

இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்திருப்பதுடன், வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

அஜித் ரசிகர்கள் செய்த விஷயம் | Ajith fans asks valimai update in style goes viral in nets

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Valimai, Valimai update will find this news story useful.