VIDEO: "அலி பாய்.." .. சேப்பாக்கம் மைதானத்தில்... அஜித் ரசிகரின் குறும்பு கேள்வி.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் பீல்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் மொயீன் அலியிடம், நடிகர் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களுக்கு பிறகு H.வினோத் இயக்கும் வலிமை திரைப்படமானது அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பானது கொரோனாவுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. அதிலிருந்தே அஜித் ரசிகர்கள் படம் குறித்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர். ஆனாலும் வலிமை திரைப்படம் சம்மந்தமான எந்த தகவலும் இதுவரை வெளிவராமல் இருந்தது.

இதனிடையே ஒரே ஒரு சண்டைக்காட்சியைத் தவிர ஏனைய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் இந்தியா இங்கிலாந்து அணிகளிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது தொடங்கியது. இப்போட்டியை காண வந்த ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்டு பதாகைகள் எடுத்து வந்திருந்தனர்.

அதைக் கேட்ட மொயீன் அலி அந்த ரசிகர் என்ன கூறுகிறார் என தெரியாமல் சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மொய்தீன் அலியிடம் வலிமை அப்டேட் Ajith Fan valimai Moeen Ali

People looking for online information on அஜித், வலிமை, Moeen Ali, Thala, Trending, Valimai, ValimaiUpdate, Viral will find this news story useful.