அடடே.. அஜித் - ஷாலினி மகளா இது? நெடுநெடுனு வளர்ந்துட்டாங்களே!... தீயாய் பரவும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மையில் தல அஜித் குமார் மற்றும் நடிகை ஷாலினி தம்பதியர் சகிதமாக கொண்டாடிய தீபாவளி புகைப்படங்களை இணையத்தில் காண முடிந்தது. 

Advertising
>
Advertising

இதில் நடிகை ஷாமிலியும் இடம் பெற்றிருந்த புகைப்படங்களும் வைரலாகி வந்தன. இதேபோல் அஜித் - ஷாலினியின் மகன் ஆத்விக், தமது தந்தை அஜித்துடன் ஹெல்மெட் அணிந்தபடி இருந்த ஒற்றை புகைப்படமும் ட்ரெண்ட் ஆனது. 

தல அஜித், நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹெ.வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்தில் 2வது முறையாக கைகோர்த்திருந்தார். இப்படத்தின் சிங்கிள், மோஷன் போஸ்டர் தொடங்கி, கிளிம்ப்ஸ் எனப்படும் சிறப்பு முன்னோட்ட காட்சிகள் வரை வெளியாகி வைரலாகி வந்தன. 

வலிமை திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் நிலையில், குடும்பத்துடன் தல அஜித் கொண்டாடிய தீபாவளி புகைப்படங்கள் வைரலாகி வந்தன. இதில் அஜித் - ஷாலினி மகளான அனௌஷ்கா இடம் பெற்றிருப்பதை காணமுடிகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும், அடடே.. அஜித் - ஷாலினி மகளா இது? நெடுநெடுனு வளர்ந்துட்டாங்களே! என்று ஆச்சர்யமாக குறிப்பிட்டு வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Ajith and Shalini Daughter Anoushka viral pic breaks internet

People looking for online information on Aadvik, Ajith Kumar, Anoushka, Shalini, Shamili, Thala Ajith, Thala AjithKumar, ThalaAjith will find this news story useful.