AJITH : "துணிவா.?. மங்காத்தா 2-ஆ?".. AK-வுடன் ஆக்‌ஷன் கிங்.. TREND ஆகும் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertising
>
Advertising

அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

போனி கபூரின் பே வியூவ் புரோஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார்.  துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித்துடன், நடிகர் அர்ஜூன் இடம்பெறும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ரசிகர்களும் இதில் உடன் இடம்பெற்றுள்ளனர்.  நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகர் அர்ஜூன் மங்காத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். ர்.

அந்த படத்திலேயே அர்ஜூனை நடிகர் அஜித் ஆக்‌ஷன் கிங் என சொல்லி அழைப்பார். இந்நிலையில் இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் அர்ஜூன் துணிவு படத்தில் நடிக்கிறாரா..? இல்லை மங்காத்தா பார்ட் -2 படத்துக்கான பேச்சுகள் எதுவும் போகிறதா என பேசி வருகின்றனர்.

இதனிடையே நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் பிறந்த தினமான நவம்பர் 20-ஆம் தேதியை முன்னிட்டு, அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது, அது தொடர்பான நிகழ்வில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith and Arjun togethor pic trending Amid Shalini Birthday

People looking for online information on Ajith Kumar, Ajith Shalini, Arjun, Mankatha, Shalini birthday, Thunivu will find this news story useful.