நடிகர் அஜித்துடன் 7 வது முறையாக #AK61-ல் இணைந்த முன்னணி கலை இயக்குனர்! சம்பவம் வேறமாரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்தின் AK61 வது படத்தில் பிரபல கலை இயக்குனர் பணியாற்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த மாதம் ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார்.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் பிரபல கலை இயக்குனர் மிலன் பெர்ணான்டஸ் மற்றும் அவரது குழுவினர் நடிகர் அஜித் உடன் எடுத்த  BTS புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் AK61 படத்தில் மிலன் கலை இயக்குனராக பணிபுரிவது உறுதியாகி உள்ளது. மிலன், ஏற்கனவே அஜித் நடித்த பில்லா, ஏகன், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பணியாற்றியவர்.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith AK61 Movie Production Designer Milan Fernandez

People looking for online information on Ajith Kumar, AK61, H Vinoth, Milan, Milan Fernandez, Valimai will find this news story useful.