அஜித் நடிக்கும் 'AK62'.. ஷூட்டிங் தொடங்கும் முன்பே OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் AK 62  படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | துணிவு & வாரிசு படங்கள் குறித்து ட்வீட் செய்த LEGEND சரவணன்.. TRENDING

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று துணிவு படம் திரையரங்குகளில் வெளியானது. அன்று அதிகாலை 1 மணிக்கே துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் AK62 படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | முதல்முறையாக தனது மகனின் முகம் தெரியும் PHOTO-வை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..😍!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith AK 62 Movie OTT digital rights Bagged by Netflix

People looking for online information on Ajith Kumar, AK 62 Movie, AK 62 Movie OTT digital rights, Netflix will find this news story useful.