கோப்ரா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து பதில் அளித்துள்ளார்.
Also Read | மல்லிகைப்பூ, பட்டுப்புடவையில் சாய் பல்லவி.. தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம்! வைரல் வீடியோ
விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் முதல் நாள் முதல் காட்சி காலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. மற்ற இடங்களில் காலை 7 மணிக்கு, முதல் காட்சி திரையிடப்பட்டது.
இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்க, இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் சென்னை நகரில் 21 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 87 திரையரங்குகளிலும், கோப்ரா படம் வெளியாகி உள்ளது. திருச்சி தஞ்சாவூர் ஏரியாவில் 42 திரையரங்குகளிலும், மதுரை ஏரியாவில் 69 திரையரங்குகளிலும், திருநெல்வேலி ஏரியாவில் 31 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 89 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியா & வட ஆற்காடு ஏரியா முறையே 52 & 46 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 488 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது. இந்த கோப்ரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு CBFC, U/A சான்றிதழ் வழங்கியது. மேலும் இந்த படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 3 வினாடிகள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் குறித்து ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த நிகழ்வில் கோப்ரா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு, "இரண்டாம் பாகம் குறித்த திட்டம் எதுவும் இல்லை, இந்த படத்தை ஒரே பாகமாக தனித்த திரைப்படமாக முடிக்கவே திட்டமிட்டோம்" என கூறியுள்ளார்.
இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
Also Read | 3:33 லக்கி நம்பரா? ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து!