"தேசிய மொழி இல்லனா ஏன் உங்க படத்த இந்தில ரிலீஸ் பண்றீங்க?" - அஜய் தேவ்கன் பரபரப்பு கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்  இந்தி மொழி குறித்து சர்ச்சை டிவீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | லைக்கா வெளியிட்ட "டான்" படத்தின் புதிய போஸ்டர் GLIMPSE! செம்ம COLORFUL ட்ரீட் இருக்கு

KGF சாப்டர் 2 ப்டத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் கிச்சா சுதீப் ஒரு நிகழ்வில் பான்-இந்தியப் படங்கள் பற்றிப் பேசினார். அதில், "இந்தி இனி ஒரு தேசிய மொழி அல்ல" என்று கூறினார்.

அதற்கு, ​​நடிகரும் இயக்குனருமான அஜய் தேவ்கன் கன்னட நடிகர் சுதீப் கருத்துக்கு பதிலளித்துள்ளார். ஹிந்தியில் எழுதியுள்ள ட்வீட்டில், அஜய், இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால், சுதீப் ஏன் தனது படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறார் என்று கேள்வி கேட்டுள்ளார்.

அஜய் தேவ்கனின் ட்வீட் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, “@KicchaSudeep அண்ணா, உங்கள் கருத்துப்படி இந்தி உங்கள் தேசிய மொழி இல்லையென்றால், உங்கள் தாய்மொழியில் எடுக்கப்பட்ட படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி நமது தாய் மொழி, நமது தேசிய மொழி, அது எப்போதும் இருக்கும். ஜன கன மன.” என தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, "ஆர்: தி டெட்லீஸ்ட் கேங்ஸ்டர் எவர்" திரைப்பட வெளியீட்டு விழாவில் சுதீப் கருத்து தெரிவித்தார். ஒரு கன்னடப் படம் பான்-இந்தியாவில் ஹிட் ஆனதைப் பற்றி சுதீப்பிடம் கேட்டபோது, ​​“ஒரு பான் இந்தியா படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டதாக நீங்கள் சொன்னீர்கள். நான் ஒரு சிறிய திருத்தம் செய்ய விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி இல்லை. அவர்கள் (பாலிவுட்) இன்று பான்-இந்திய திரைப்படங்களை செய்கிறார்கள். அவர்கள் தெலுங்கு மற்றும் தமிழில் டப்பிங் செய்து (வெற்றியைக் காண) போராடுகிறார்கள், ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் நாங்கள் இன்று எங்கும் செல்லும் படங்களைத் தயாரித்து வருகிறோம்” என்றார்.

சமீபத்திய மாதங்களில், கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா: தி ரைஸ் போன்ற படங்களின் வெற்றியானது, இந்த விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

சற்று முன், அஜய் தேவ்கன் மீண்டும் டிவீட் செய்துள்ளார். அதில், "வணக்கம் கிச்சா சுதீப், நீங்கள்  நண்பர். தவறான புரிதலை விளக்கியதற்கு நன்றி. நான் எப்போதும் சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், நம் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை, மொழிபெயர்ப்பில் ஏதோ தவறியிருக்கலாம்." என குறிப்பிடப்பட்டுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"தேசிய மொழி இல்லனா ஏன் உங்க படத்த இந்தில ரிலீஸ் பண்றீங்க?" - அஜய் தேவ்கன் பரபரப்பு கருத்து வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajay Devgan tweet about Hindi language regional films Kicha Sudeep

People looking for online information on Ajay devgan, Ajay Devgan tweet, அஜய் தேவ்கன், Hindi language, Regional films Kicha will find this news story useful.