மகன்களுடன் 'WEEKEND' ஸ்பெஷல்.. ஃபுல் சாப்பாடு, அல்டிமேட் 'FUN'.. மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வரயா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரியப் போவதாக மனமொத்து ஒரே நேரத்தில் அறிவித்திருந்தனர்.

Aishwarya rajinikanth spends weekend with her sons
Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களின் வேலைகளில் அதிக கவனம் செலுத்தவும் தொடங்கி வருகின்றனர்.

திரைப்படத்தில் கவனம்

நடிகர் தனுஷின் நடிப்பில் கடைசியாக மாறன் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், அடுத்ததாக திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே போல, பவர் பாண்டி படத்தை இயக்கி இருந்த தனுஷ், அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் தகவல், இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளது.

வாழ்த்திய சினிமா பிரபலங்கள்

இன்னொரு பக்கம், ஐஸ்வர்யா இயக்கி இருந்த 'பயணி' என்னும் மியூசிக் ஆல்பம், பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகி இருந்தது. சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு, இயக்கத்தில் களமிறங்கிய ஐஸ்வர்யாவுக்கு, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமாத்துறையின் பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதற்கு அடுத்தபடியாக, ஹிந்தி திரைப்படம் ஒன்றை இயக்குவதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

குழந்தைகளுடன் தனுஷ், ஐஸ்வர்யா

இதற்கான வேலைகளில் அவர் ஈடுபடும் புகைப்படங்களையும் அதிகம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதே போல, கடின வொர்க் அவுட் செய்வதிலும் ஐஸ்வர்யா அதிக கவனத்தை மேற்கொண்டு வருகிறார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர், திரைப்பட வேலைகளில் பிசியாக இருந்து வந்தாலும், குழந்தைகளுடன் நேரம் செலவிடவும் தவறுவதில்லை.

இரண்டு மகன்களுடன், இசை நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் கலந்து கொண்டிருந்த புகைப்படங்கள் அதிகம் வைரலாகி இருந்தது. அதே போல, ஐஸ்வர்யாவும் கடந்த மாத இறுதியில் மகன்களுடன் பகிர்ந்திருந்த புகைப்படங்கள், அதிகம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில், மீண்டும் ஒருமுறை மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தினை ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'Weekend' ஸ்பெஷல்

ஞாயிற்றுக்கிழமை தினமான நேற்று (04.04.2021), மகன்களுடன் நேரத்தை கழித்து அவர்களுடன் உணவு அருந்திய ஐஸ்வர்யா, மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதில், "மகன்கள் மற்றும் ஞாயிற்றுகிழமை. உங்களின் Weekend எப்படி சென்று கொண்டிருக்கிறது?" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான பதிவுகள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மகன்களுடன் 'WEEKEND' ஸ்பெஷல்.. ஃபுல் சாப்பாடு, அல்டிமேட் 'FUN'.. மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya rajinikanth spends weekend with her sons

People looking for online information on Aishwarya R Dhanush, Dhanush, Maaran, Sons will find this news story useful.