"வெள்ளிக்கிழமை அதுவுமா".. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த 'லால் சலாம்' படத்தின் BTS PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நாயகன் மீண்டும் வாரார்".. அசர வைக்கும் புதிய லுக்கில் சிம்பு.. தெறிக்கவிடும் போட்டோஸ்!  

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் '3', கௌதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், "வெள்ளிக்கிழமை அன்று ஒரு பழமையான அம்மன் கோவிலில்  படப்பிடிப்பு ஆரம்பம்... இதை தற்செயல் என்று அழைக்கலாம் அல்லது சில சமயங்களில் கடவுள் தனது குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான  வழி என நான் நம்புகிறேன்😇" என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

Also Read | "கல்யாணம் பண்ணிக்கலாமா?".. ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன்..!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth Post about Lal salaam shooting update

People looking for online information on Aishwarya Rajinikanth, Aishwarya Rajinikanth post, Lal Salaam, Lal salaam shooting Update will find this news story useful.