"அண்ணாமலை அருளோட".. அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்.. ஐஸ்வர்யா ரஜனிகாந்த் பகிர்ந்த வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பமும் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகர்களாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

லால் சலாம் படத்தின் பூஜை நடைபெற்றிருந்த சூழலில் இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது. தொடர்ந்து, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இருந்த வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். திரைப்பட வேலைகளில் மூழ்கி இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மறுபக்கம் கடினமாக உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஐஸ்வர்யா.

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில், தற்போது லால் சலாம் படம் குறித்த அப்டேட் ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லால் சலாம் படத்தின் செட் வொர்க் தற்போது தொடங்கி உள்ள சூழலில், அதற்கு முன்பாக நடந்த பூஜையின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் மூலம் ஒரு கிராமப்பகுதியில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற இருப்பதும் தெரிய வருகிறது. ரஜினிகாந்த்   இந்த படத்தில் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya rajinikanth latest update on lal salaam movie

People looking for online information on Aishwarya Rajinikanth, Lal Salaam, Rajinikanth will find this news story useful.