லால் சலாம் படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
![Aishwarya Rajinikanth Latest Instagram Post about Lal Salaam Aishwarya Rajinikanth Latest Instagram Post about Lal Salaam](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/aishwarya-rajinikanth-latest-instagram-post-about-lal-salaam-new-home-mob-index.jpeg)
Also Read | "உயிரோட இருக்கேன்".. 90S சீரியல் நடிகர் வேணு அரவிந்த் இப்போ எப்படி இருக்கார்? Exclusive
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.
அண்மையில் அதிக வருமான வரி செலுத்துவதற்காக, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில சார்பில் வழங்கப்பட்ட கௌரவ சான்றிதழை, தமது தந்தை சார்பில் சென்று பெற்றுக்கொண்ட ஐஸ்வர்யா, பெருமையான மகளாக உணர்ந்ததாகவும் அப்போது தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வயதான முதியவரை ஆடிசன் செய்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து லால் சலாம் படத்தின் வேலைகள் நடந்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
Also Read | பாகுபலி வசூலை முறியடித்த RRR.. ஜப்பானில் மட்டும் இத்தனை கோடி வசூலா! மாஸ் சம்பவம்