நடிகர் ரஜினிகாந்த்திற்கு முக்கியமான நாளில் தொடங்கிய லால் சலாம் ஷூட்டிங்.. வைரல் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் '3', கௌதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையான இன்று, இயக்குனர் கே. பாலசந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்ற பெயரை ரஜினிகாந்த் என மாற்றிய தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth Lal Salaam Movie Shooting started

People looking for online information on Rajinikanth, Superstar will find this news story useful.