ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகான தனது புகைபடத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

குடும்பமும் சினிமாவும்…
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அந்த தமபதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இதையடுத்து சமீபத்தில் அவர்கள் திருமன வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வயா ரஜினிகாந்த் தன்னுடைய திரை வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பயணி ஆல்பமும், பாலிவுட் அறிமுகமும்..
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நான்கு மொழிகளில் முசாஃபிர் (தமிழில் பயணி) என்ற வீடியோ ஆல்பம் உருவானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பாடலை ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சில பக்கத்தில் ளியிட்டுள்ளார். இந்த ஆல்பம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதை சமீபத்தில் அறிவித்திருந்தார். ஓ சாத்தி சால் என்ற படத்தின் மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்பட இயக்கத்துக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் காதல் கதை என்று அந்த படத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கான திரைக்கதை வேலைகளில் இப்போது அவர் ஈடுபட்டு வருகிறார்.
மருத்துவமனையும் work out-ம்
சமீபத்தில் கொரோனா பாதிப்பால் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அங்கிருந்த படி தனது சினிமா சம்மந்தமான வேலைகளைப் பார்த்து வந்தார். இப்போது மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ள அவர் உடல்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அதிகமாக தனது உடல்பயிற்சி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இப்போது கடுமையான உடல்பயிற்சிக்குப் பிறகு உடலில் வியர்வை வழிய இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் ‘சூழலுக்கேற்ற பாடல்… எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்தல்… என்ன ஆனாலும் சரி workout’ எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் இப்போது வைரல் ஆகி வருகிறது.