ஒரு மாசத்துக்கு அப்பறம் ஜிம்... டயர்ட் ஆகி சுவற்றில் சாய்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்து பரஸ்பர அறிக்கையை வெளியிட்டனர். நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.  

Advertising
>
Advertising

அரபிக்குத்துக்கு ஆடுன சேலையோடு Jolly O ஜிம்கானா பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடிய அஞ்சு குரியன்!

இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த முடிவு பரபரப்பை கிளப்பியது.

"18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் இணைத்து... வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு,எனப் பயணம் செய்தோம்.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்... இருவரும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்". என அறிக்கையில் இருவரும் கூறி இருந்தனர்.

ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து  '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது லைகா நிறுவனத்துக்காக புதிய படமும், அது போக இந்தியில் ஒரு படத்தையும் இயக்க உள்ளார்.  இவர் இயக்கிய 'சினிமா வீரன்' என்ற ஆவண படமும், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பயணி மியுசிக் வீடியோவும் சமீபத்தில் வெளியானது.

னது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரோவோடு இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு மாதத்திற்கும் மேலாக மீண்டும் GYM உடற்பயிற்சி செய்யத் திரும்பி உள்ளேன்...உடல் வலியால் அலறுவதை நான் கேட்கிறேன் ...
பயிற்சிக்கு பிறகு நான் சுவரில் சாய்ந்தேன் .. நான் விழுந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தேன்... எடையுடன் நான் சிரிக்கிறேன். நான் மைல் தூரம் ஓட முடியும் என்று எனக்குத் தெரியும்! இதை நான் முன்பே செய்திருக்கிறேன்.. வலிமையை நான் என் இதயத்திலிருந்து பெறுகிறேன் ...நம்மில் யாருக்கும் நமது உண்மையான சக்தி தெரியாது...
அச்சப்படும் உறையை தோண்டி வெளியே எடுக்க வேண்டும்... வியர்வை வியர்வை .. நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள் ..பளபள என வளரவும்....எல்லா நேர்மறைகளும் வரட்டும்" என பதிவிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் புதிய படம்...! விஜய்யின் அடுத்த பட இயக்குனர் போட்ட செம பிளான்...

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth Gym Work Out Post on Instagram

People looking for online information on Aishwarya Rajinikanth, Aishwarya Rajinikanth Gym Work Out will find this news story useful.