சென்னையில் எப்போதுமே வெயில் கடுமையாக வாட்டி வதைக்கும் நிலையில், கடந்த ஒன்றிரண்டு தினங்களாக, பல பகுதியில் மழையும், குளிருமாக சிறந்த Climate உருவாகி உள்ளது.
Also Read | BREAKING: விக்ரமின் கோப்ரா ரிலீஸ் தேதி இதுவா..? சம்பவம் Confirm-னா இத்தன நாள் லீவு இருக்கு..!
வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொழுத்தி எடுக்கும் நிலையில், தற்போது சிறந்த கால நிலை இருப்பதால், சென்னைவாசிகள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சென்னை மெரினா கடற்கரை அருகே, சைக்கிளிங்கில் ஈடுபடும் வீடியோக்கள், அதிகம் வைரலாகி வருகிறது.
நீண்ட நாளுக்கு பிறகு டைரக்ஷன்
'3', 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்த ஐஸ்வர்யா, சுமார் 7 ஆண்டுகளாக திரைப்படங்கள் எதையும் இயக்காமல் இருந்து வந்தார். இதனையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பின், மியூசிக் ஆல்பம் ஒன்றை, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இயக்கி இருந்தார். இந்த ஆல்பம் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
ஹிந்தி படம் இயக்கும் ஐஸ்வர்யா
இதனையடுத்து, ஹிந்தியில் திரைப்படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கப் போவதாகவும் அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அடுத்தடுத்து இயக்கம் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஐஸ்வர்யா. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மகன்களுடன் நேரம் செலவிடுவது, கடினமான வொர்க் அவுட் என பிஸியாகவும் இருந்து வருகிறார்.
சைக்கிளிங் வீடியோ
அந்த வகையில், தற்போது அவர் சைக்கிளிங் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ஸ்லோ மோஷன் வீடியோவில், மெரினா அருகே உள்ள சாலையில், சில குழந்தைகள் ஸ்கேட்டிங் செய்த படி, ஓரமாக சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கு நடுவே, சைக்கிளில் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இது ஒரு புறம் இருக்க, சாலை ஓரம் சைக்கிளுடன் நிற்கும் ஒரு சில புகைப்படங்களும் அவரது பதிவில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வொர்க் அவுட்டில் அதிக கவனம் மேற்கொண்டு வரும் ஐஸ்வர்யா, இந்த நாளை சைக்கிளிங்குடன் அசத்தலாக தொடங்கியுள்ளது பற்றி, ரசிகர்கள் பலரும் பதிவின் கீழ், கமெண்ட்டுகள் மூலம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8