ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.
மாலத்தீவில் RRR நடிகை ஆலியா பட்.. நெருக்கமாக கூட இருக்கிறது யாருனு தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அந்த தமபதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இதையடுத்து சமீபத்தில் அவர்கள் திருமன வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வயா ரஜினிகாந்த் தன்னுடைய திரை வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பயணி ஆல்பம்…
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நான்கு மொழிகளில் முசாஃபிர் (தமிழில் பயணி) என்ற வீடியோ ஆல்பம் உருவானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பாடலை ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார். தமிழில் ரஜினிகாந்த் வெளியிட்டது போல மலையாள வெர்ஷனை மோகன்லால் மற்றும் தெலுங்கு வெர்ஷனை அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோர், இந்த பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலுக்கு தனுஷ் வாழ்த்து சொல்ல, ஐஸ்வர்யா அவருக்கு நன்றி கூறியிருந்தார்.
மகன்களோடு எமோஷனல் ஸ்டேட்டஸ்
தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரோவோடு இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அந்த புகைப்படத்தோடு ’நீங்கள் இருவரும் வயிற்றில் இருக்கும்போது என்னை உதைத்தீர்கள்.. இப்போது நீங்கள் இருவரும் வளர்ந்து என்னை முத்தமிடுவதில் அளவிலாத மகிழ்ச்சி.. அன்பான இப்படிப்பட்ட பிள்ளைகளை கொடுத்ததற்காக ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்… உங்களை வளர்த்து, பெரியவர்களாக பார்ப்பது வாழ்நாள் சந்தோஷம்’ எனக் கூறியுள்ளார்.
பாலிவுட் அறிமுகம்…
சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாவதை அறிவித்திருந்தார். ஓ சாத்தி சால் என்ற படத்தின் மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்பட இயக்கத்துக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் காதல் கதை என்று அந்த படத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கான திரைக்கதை வேலைகளில் இப்போது அவர் ஈடுபட்டு வருகிறார்.
ஐஸ்வர்யாவின் பிஸி schedule
இந்நிலையில் இப்படி சமீபகாலமாக பிஸியாக செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘அறிவிப்புகள், நிறைய ஜூம் அழைப்புகள் தங்கையுடன் உரையாடல், திரைக்கதை வேலை, பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு ( மிகவும் கடினமானது!)…. காபி இல்லாமல் ஒரு நாளும் தொடங்குவதில்லை.. வார இறுதி நாட்களை வரவேற்கும் முன் வெள்ளிக்கிழமை வேலையை தொடங்கிவிட்டேன். என் மோசமான கூந்தலைத் தவிர இந்த வாரம் மிகவும் அழகாக இருந்தது’ எனக் கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் இப்போது கவனத்தைப் பெற்று வருகிறது.
RRR FDFS: படம் எப்படி இருக்கு? தெறிக்க விடும் public கமெண்ட்ஸ்.. வீடியோ!