கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட"தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் R. கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது.
ஒரு நடுத்தர வர்க்க பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா? இல்லையா? திருமணத்துக்கு பிறகான அவளது வாழ்க்கை எப்படி இருக்கிறது.? கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படியெல்லாம் நடத்துகிறார்கள்? அவளது உணர்வுகளும் சுயமரியாதையும் என்னவாகின்றன? என்பதே இக்கதை.
மலையாளத்தில் நிமிஷா நடித்த இந்த கேரக்டரின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதன் முதல் நாள் படபிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். காரைக்குடியிலும் தொடர்ந்து இந்த படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் இந்த படம் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஒரு பெரிய பாராட்டுக்கள் குவியும் கேரக்டராக இது அமையும். இந்த படத்தில் இவரது ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.
'மாஸ்கோவின் காவேரி ' படம் மூலம் சமந்தாவுடன் தமிழில் அறிமுகமான ராகுல் ரவீந்திரன், அதற்கு பின்பு 'வணக்கம் சென்னை ', யூ- டர்ன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதே வேளையில் 'அந்தாள ராட்சசி' படம் மூலம் தெலுங்கிலும் நாயகனாக அறிமுகமாகி பிரபலமானார் . தெலுங்கில் இயக்குநராகவும் வலம் வரும் ராகுல் ரவீந்திரன் மீண்டும் தமிழ் - தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்கிறார். இவர் பாடகி சின்மயியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்கு ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். R.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்ஷன் சார்பாக M.K. ராம் பிரசாத் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.