சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடித்த ரிபப்ளிக் திரைப்படம் அக்டோபர் 1 ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது.
சாய் தரம் தேஜ் ஒரு ஐஏஎஸ் அதிகாrரியாக நடித்தார், இது ஒரு அரசியல் த்ரில்லர் வகைமையில் உருவானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மைரா ஹான்சன் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பரவலான வரவேற்பை இந்த படம் பெற்றது.
இந்த படத்தை தேவ கட்டா இயக்கியுள்ளார் மற்றும் ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து ஜேபி என்டர்டெயின்மென்ட் பேனரில் ஜே புள்ளா ராவ் மற்றும் ஜே பகவான் இணைந்து தயாரித்துள்ளனர். ஜெகபதி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஒடிடி உரிமையை ஜி5 நிறுவனம் கைப்பற்றியது. இதனால் இந்த படம் வரும் நவம்பர் 26 ஆம் நாள் ஒடிடியில் ரிலிசாகிறது. இதனை ஜி5 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.