நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ், தனது ரசிகைக்கு ஒரு சூப்பர் மெசேஜை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் ஐஷ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை, தர்மதுரை, வடச்சென்னை, கனா உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. மேலும் இவர் கடந்த ஆண்டு நடித்த நம்ம வீட்டு பிள்ளையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் நடித்த க/பே.ரனசிங்கம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் ஐஷ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டார். இதற்கு அவரின் ரசிகை ஒருவர், ''நான் உங்களின் தீவிர ரசிகை. உங்களுக்காக சாகவும் தயாராக இருக்கிறேன்'' என எமோஷனலாக கமன்ட் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஐஷ்வர்யா ராஜேஷ், ''யாரும் யாருக்காகவும் சாக கூடாது, உங்களை போன்ற ரசிகர்கள் எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி, இனி இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்'' என கனிவாக கமன்ட் அடித்துள்ளார் கனா பட நாயகி.