'பிரபல விளையாட்டு வீராங்கனை BIOPIC-ல்?'.. ஐஸ்வர்யா ராஜேஷா? உண்மை என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் போக்கும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் மேரி கோம், மில்கா சிங் ,தோனி குறித்த வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகின. இதேபோல் கபில்தேவ், சாய்னா நேவல், பிவி சிந்து, மிதாலிராஜ், சானியாமிர்சா, மல்லேஸ்வரி உள்ளிட்டோரின் படங்களும் அடுத்தடுத்து தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழகத்தை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. 12 சர்வதேச பதக்கங்களை இந்தியாவுக்கும், 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை தமிழகத்துக்கும் பெற்றுத்தந்த சாந்தி சௌந்தரராஜன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண்.

ஆனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடந்த பாலின சோதனை அறிக்கை அடிப்படையில் பெண்களுக்கான போட்டியில் அவருக்கு தகுதி மறுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. பின்னர் தடகள போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். இத்தனை திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து சாந்தி சௌந்தரராஜன் என்கிற திரைப்படத்தை எடுப்பதற்கு அவரிடம் ஒப்புதல் பெறப்பட்டு படம் தயாராவதாக படத்தின் இயக்குநர் ஜெயசீலன் தவப்புதல்வி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பதாகவும், ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் சாந்தி சௌந்தரராஜன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த தகவல் உண்மை அல்ல என்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷின் தரப்பிலிருந்தும் இந்த தகவல் உண்மையல்ல என்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ALSO READ: ஒலிம்பிக்கில் முதல் இந்திய வாள்சண்டை வீராங்கனை!.. பிரபல இயக்குநர் செய்தது என்ன தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh not playing Shanthi Soundararajan biopic

People looking for online information on Aishwarya Rajesh, Shanthi Soundararajan will find this news story useful.