ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிப்பில் ‘சுழல்’… பிரபல ஓடிடியில் நேரடி ரிலீஸ்… மிரட்டலான டிரைலர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுழல் வெப் தொடரின் டிரைலர் 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

அமேசான் ப்ரைமில் சுழல்…


விக்ரம் வேதா பட புகழ் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதியினர் கதை எழுத, ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கியக் கதபாத்திரத்தில் நடிக்கும் ‘சுழல்’ என்ற புதிய வெப் சீரிஸை குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மாவும், கிருமி இயக்குனர் அணுசரனும் இயக்குகின்றனர். அமேசான் ப்ரைம் வெளியீடாக வர உள்ள இந்த தொடர் த்ரில்லர் வகையில் உருவாக்கப்படும் இந்த சீரிஸின் முதல் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

ஸ்ட்ரீமிங்…

இந்த சீரிஸ் பற்றி தெரிவித்துள்ள ப்ரைம் வீடியோ “ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போகும் நபர்களை பற்றிய தேடுதலில் வெளிவரும் பயங்கரமான உண்மைகள் பற்றிய கதை” எனக் கூறியிருந்தனர். வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை புதிய மோஷன் போஸ்டரோடு அமேசான் ப்ரைம் அறிவித்துள்ளது.

வெளியான டிரைலர்…

இந்நிலையில் தற்போது இந்த தொடரின் டிரைலர் ஐந்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது. நிலா என்ற காணாமல் போன பெண்ணைத் தேடும் பொழுது எதிர்வரும் மர்மமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கதையாக இருக்கும் என டிரைலரைப் பார்க்கையில் தோன்றுகிறது.  இந்த டிரைலரில் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை ஆகிய இரண்டு அம்சங்களும் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்துள்ளன. இந்த டிரைலர் தொடரை பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ்…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அண்மையில் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் மற்றும் திட்டம் இரண்டு ஆகியவை முக்கியமான படங்களாக அமைந்தன. சமீபத்தில் அவர் நடித்த கனா திரைப்படம் சீனாவில் வெளியாகி சாதனை படைத்தது. இந்த வரிசையில் அவர் நடித்துள்ள ‘சுழல்’ வெப் தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை விதைத்த தொடராக அமைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh Kathir suzhal trailer released

People looking for online information on Kathir, Parthiban, Shreya Reddy will find this news story useful.