”என்ன ஆச்சுனு தெரில”… ஐஸ்வர்யா ராஜேஷ் TWEET… மீட்டுக்கொடுத்த இன்ஸ்டாகிராம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
>
Advertising

“10 வருஷமா ஏன் பேட்டி கொடுக்குறது இல்ல”…. நெல்சன் கேள்விக்கு விஜய்யின் பதில்? – வைரல் promo!

கவனம் ஈர்த்த படங்கள்….

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அண்மையில் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் மற்றும் திட்டம் இரண்டு ஆகியவை முக்கியமான படங்களாக அமைந்தன.

திருப்புமுனை கனா…

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முன்னதாக வெளியான கனா திரைப்படம் அவருடைய கரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றது கனா திரைப்படம். இப்போது அந்த படம் சீனாவில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் சிக்கல்…

சமூகவலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து ஒரு ட்வீட்டைப் பகிர்ந்திருந்தார். அதில் ‘என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஹேக் செய்யப்பட்டதா அல்லது சஸ்பெண்ட் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. தயவு செய்து உதவவும்’ என இன்ஸ்டாகிராமை டேக் செய்திருந்தார். இதையடுத்து இப்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு திரும்ப பெறப்பட்டதாகவும் நடவடிக்கை எடுத்த இன்ஸ்டாகிராமுக்கு நன்றி தெரிவித்தும் டிவீட் செய்துள்ளார்.

குழப்பங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே வேறு சிலரும் இன்ஸ்டாகிராமில் வேறு சில பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். சிவாங்கி உள்ளிட்ட சில பிரபலங்களும் இதுபோல இன்ஸ்டாகிராமில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டதாக வெளிப்படுத்தியுள்ளனர். சிலருக்கு திடீரென அதிக அளவில் பாலோயர்ஸ்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

பிரசவத்துக்குப் பிறகு முதல் முறையாக ரசிகர்களோடு உரையாடிய ஆல்யா மானசா! வைரல் ஸ்டோரி

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya rajesh instagram account hacked and resolved

People looking for online information on Aishwarya Rajesh, Aishwarya rajesh instagram hacked, Aishwarya rajesh Tweet will find this news story useful.