பாரிஸ் நகரில் இன்பச்சுற்றுலா.. EIFFEL TOWER-ல் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் சுற்றுலா சென்றுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | Life of Pazham: அனிருத் குரலில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அடுத்த சிங்கிள்.. செம்ம!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து  படங்கள் வெளியாக உள்ளன.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முன்னதாக வெளியான கனா திரைப்படம் அவருடைய கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றது கனா திரைப்படம். இந்த திரைப்படம் சமீபத்தில் சீனாவிலும் வெளியாகி சாதனை படைத்தது. 2.0 படத்துக்குப் பிறகு தமிழ்ப்படம் ஒன்று சீனாவில் வெளியாவது இதுவே முதல்முறையாக அமைந்தது.

அதுபோலவே அண்மையில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் படமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ்  டிரைவர் ஜமுனா படத்தில்  கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த பட்த்தை இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார்.

அதேபோல் கண்ணன் இயக்கத்தில் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார்.  

இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து ஈபிள் கோபுரம் அருகில் அமர்ந்தும் நின்றும் நடந்தும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Also Read | விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'LIGER'.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நடிகர்! போடு வெடிய

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh France Paris Eiffel Tower Photos

People looking for online information on Aishwarya Rajesh, Aishwarya Rajesh Paris Eiffel Tower Photos, Paris Eiffel Tower will find this news story useful.