போடு! அடுத்தடுத்த நாளில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள்.. வேறமாரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்த நாளில் ரிலீஸாக உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | நீண்ட நாட்களுக்கு பிறகு தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் அப்பாஸ்..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில்  ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து  படங்கள் வெளியாக உள்ளன.

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம், பூமிகா, திட்டம் இரண்டு ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ்,  டிரைவர் ஜமுனா படத்தில்  கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார். அதேபோல் கண்ணன் இயக்கத்தில் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் பர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் & டிரைவர் ஜமுனா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாளில் ரிலீஸாக உள்ளன.

டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும், அடுத்த நாள் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி டிரைவர் ஜமுனா திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | ஜெயிலர் படப்பிடிப்பில் வேட்டி சட்டையில் ரஜினிகாந்த்.. ரசிகருடன் எடுத்த வைரல் போட்டோஸ்! TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh Films Releasing on Same Week

People looking for online information on Aishwarya Rajesh, Driver Jamuna, The Great Indian Kitchen will find this news story useful.