மும்பை : ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "The Great Indian Kitchen" படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
மலையாளத்தில் கடந்தாண்டு Neestream ஓடிடியில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த படமான "The Great Indian Kitchen" விமர்சகர்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை ஜியோ பேபி எழுதி இயக்கியுள்ளார்.
நிமிஷா சஜயன் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டிஜோ அகஸ்டின், ஜோமோன் ஜேக்கப், விஷ்ணு ராஜன், சஜின் S ராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சுராஜ் S.குரூப் மற்றும் மேத்யூ புலிக்கண் இசையமைத்துள்ளனர்.
கேரளாவில் ஆசிரியராக வேலை செய்யும் சூரஜ், நடன ஆசிரியராக இருக்கும் நிமிஷாவை திருமணம் செய்கிறார். திருமணத்துக்கு பின்னர் நிமிஷாவுக்கு காலையில் எழுந்ததும் குடும்பத்துக்கு உணவு தயாரிப்பது, பாத்திரங்களை சுத்தம் செய்வது, மதிய உணவு தயாரிப்பது, மதிய உணவுக்கு பின் பாத்திரங்களை சுத்தம் செய்வது, பிறகு சமையல் அறையில் இரவு உணவுக்குப்பின் சுத்தம் செய்வது பின்னிரவில் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை. தினமும் இதே சம்பவங்கள், அதனால் ஏற்படும் பெரும் சலிப்பு. இந்த வாழ்க்கை மீது சலிப்பு ஏற்படும்போது அந்த பெண் என்ன முடிவை எடுக்கிறார் என்பதும் தான் படத்தின் ஆன்மா.
தமிழில் இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் R. கண்ணன் இயக்கத்தில் உருவாகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.இந்த படத்துக்கு ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
R.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்ஷன் சார்பாக M.K. ராம் பிரசாத் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. நெட்பிளிக்ஸின் மீனாட்சி சுந்தரேஸ்வர் படத்தில் நடித்த சானியா மல்கோத்ரா இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். ஆரத்தில் கடவ் இயக்குகிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து சான்யா மல்ஹோத்ரா, “ஒரு நடிகையாக இதை விட சிறந்த கதாபாத்திரம் வேறு என்ன வேண்டும். இப்படத்தில் நடிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.