"இந்த சீசன் ஹிட்டு".. பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பிரபல நடிகை சொன்ன விஷயம்.. காரணம் இதுதான்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "ஆவேசமா பேசுன விஷயத்த அமுதவாணன் பையன் இப்டி Fun பண்ணிட்டாரே".. விக்ரமன் குடுத்த Reaction!!

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.

இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், ரச்சிதாவின் தாயார் உள்ளிட்டோரும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

முன்னதாக, தனது குழந்தை, தாய் மற்றும் மனைவி ஆகியோர் வருவதை பார்த்ததும் வேகமாக அவர்கள் அருகே ஓடி செல்லும் மணிகண்டா, அனைவரையும் உருக்கத்துடன் கட்டியணைத்து கொள்கிறார். இதே போல, ஐஸ்வர்யா ராஜேஷும் சற்று சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுக்க ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் உற்சாகம் அடைகின்றனர்.

அப்போது அனைவர் முன்னிலையில் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ், "இந்த சீசன் வந்து சூப்பர் ஹிட்டு. இதுக்கு அப்புறம் இன்னும் கடினமா நீங்க விளையாடனும்ன்னு நான் நெனைக்கிறேன். என்ன சண்டை போட்டாலும் ஒரு ரூல் வெச்சுக்கோங்க. என்ன சண்டை நடந்தாலும் வீட்டுல ஒண்ணா உக்காந்து சாப்பிடுங்க" என நிறைய விஷயங்களை அறிவுறுத்தவும் செய்கிறார்.

இதே போல, மணிகண்டாவின் தாய், தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் என குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து ஹவுஸ் மேட்ஸ் அனைவருடனும் இணைந்து நடனமாடவும் செய்கின்றனர். Freeze டாஸ்க் மிகவும் உற்சாகமாக சென்று கொண்டிருப்பதால் அனைவரும் அதனை உற்சாகத்துடனும் கண்டு களித்து வருகின்றனர்.

Also Read | ஜனனி போனப்போ ஏன் அவ்ளோ Feel பண்ணீங்க?.. மனைவி கேள்விக்கு அமுதவாணன் சொன்ன பதில் என்ன?

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya rajesh entry in bigg boss house for manikanta rajesh

People looking for online information on Aishwarya Rajesh, Bigg boss house, Manikanta Rajesh will find this news story useful.