"அந்த பட டைம்ல ஒரு பொண்ண பாத்தேன்!".. ஐஸ்வர்யா ராஜேஷின் கண்கலங்க வைக்கும் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள மொழியில் வெளியாகி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டு பண்ணிய “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளார்.

இயக்குநர்  R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிப்பில் தமிழில் உருவாகும் இப்படத்தை இயக்குநர்  R.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். கனா, க/பெ ரணசிங்கம், என அழுத்தமான கதாப்பாத்திரங்களால் பாராட்டுக்கள் குவித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதுபற்றி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக்கடினம். படத்தின் அடிப்படை ஆத்மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம் அதனால் நான் நிறைய ரீமேக் நடிக்க மறுத்திருக்கிறேன். ஆனால் இந்தப்படம் என்னை தேடி வந்த போது கண்டிப்பாக செய்ய வேண்டும் என நினைத்தேன்.

இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து இப்படத்தில் இருக்கிறது. நான் க/பெ ரணசிங்கம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு சிறு பெண்ணை சந்தித்தேன் அவளக்கு எதுவும் சொல்லாமலேயே சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இன்றும் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை.

கிராமம் நகரம் என அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக இப்படம் பார்க்கப்பட வேண்டும். இயக்குநர் R.கண்ணன்  அவர்களுடன் எனக்கு முதல் படம் மிகச் சிறந்த இயக்குநர், அருமையான படக்குழு படப்பிடிப்பு அனுபவம் அற்புதமாக இருக்கிறது படமும் மிகச்சிறப்பாக வரும்” என தெரிவித்துள்ளார்.

ALSO READ: தமிழில் ரீமேக் ஆகும் Article15.. ஹீரோ, டைரக்டர் யார் தெரியுமா? வலிமை பட தயாரிப்பாளர் அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh emotional The Great Indian Kitchen

People looking for online information on Aishwarya Rajesh, The Great Indian Kitchen will find this news story useful.