"முதலமைச்சர் பொது நிவாரணம்.. பெப்சி அமைப்பு" என அடுத்தடுத்து நிதி வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அளவில் கொரோனாவின் தாக்கம் பெரிதளவில் உருப்பெற்று வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எனினும் மக்கள் கொரோனாவை வெல்வதற்கு  தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு வலியுறுத்தி வருகிறது. அவர்களுக்கான முறையான திட்டங்களை ஆவன செய்யவும், கொரோனாவை எதிர்ப்பதற்கு மக்களுக்கு தேவையான மருத்து வசதிகளை தடையின்றி வழங்கவும் முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதியின் கீழ் நிதியுதவி வழங்குபவர்கள் தாரளமாக வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து ரஜினி, அஜித், வெற்றிமாறன், ஜெயம் ரவி, மோகன் ராஜா, சிவகார்த்திகேயன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட பலரும் நிதி உதவிகளை வழங்கியிருந்தனர். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். மேலும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு (பெப்சி) 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். திரைப்பிரபலங்கள் பலரும் பெப்சி அமைப்புக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். 

இதேபோல் நடிகர், MP நெப்போலியன் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின்பொது நிவாரண நிதிக்கான நிதி ரூபாய் 25 லட்சம் காசோலையாக வழங்கப்பட்டது.

ALSO READ: கொரோனா பாதிப்பால் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியுட் மருத்துவமனையில் பெண் பாடலாசிரியர் அனுமதி!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya rajesh donates 1 lakh to TN CM covid relief fund

People looking for online information on Aishwarya Rajesh will find this news story useful.