புகழ்பெற்ற வாடிகன் நகரில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தோழிகளுடன் வெளியிட்ட வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இத்தாலி & வாடிகன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பாரிஸ் நகரில் இன்பச்சுற்றுலா.. Eiffel Tower-ல் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வைரல் ஃபோட்டோஸ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து  படங்கள் வெளியாக உள்ளன.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முன்னதாக வெளியான கனா திரைப்படம் அவருடைய கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றது கனா திரைப்படம். இந்த திரைப்படம் சமீபத்தில் சீனாவிலும் வெளியாகி சாதனை படைத்தது. 2.0 படத்துக்குப் பிறகு தமிழ்ப்படம் ஒன்று சீனாவில் வெளியாவது இதுவே முதல்முறையாக அமைந்தது.

அதுபோலவே அண்மையில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் படமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் சுற்றுலா சென்று அங்கிருந்து ஈபிள் கோபுரம் அருகில் அமர்ந்தும் நின்றும் நடந்தும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரான்ஸ் சுற்றுலாவை முடித்து கொண்டு  நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

நெதர்லாந்து நாட்டின் காற்றாலை நகரமான Zaanse Schans & ஆம்ஸ்டர்டம் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து புதிய  புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கே பிரசித்தி பெற்ற கோலோசியம் அரங்கின் வெளியே எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் வாட்டிகன் நகரில் உள்ள மியூசியத்தில் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ்  டிரைவர் ஜமுனா படத்தில்  கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார்.

அதேபோல் கண்ணன் இயக்கத்தில் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார்.

Also Read | பிரான்ஸ் டூர் முடிஞ்சது.. அடுத்து இந்த நாடு தான்! ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh at Vatican City Italy Rome

People looking for online information on Aishwarya Rajesh, Aishwarya Rajesh at Vatican City will find this news story useful.