பிரான்ஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அப்படி என்ன ஸ்பெஷல்? முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பிரான்ஸ் நாட்டிலுள்ள உலகப் புகழ் பெற்ற மியூசியத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. சேட்டிலைட் டிவி உரிமையை கைப்பற்றிய பிரபல சேனல்! சூப்பர்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில்  ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து  படங்கள் வெளியாக உள்ளன.

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம், பூமிகா, திட்டம் இரண்டு ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ்,  டிரைவர் ஜமுனா படத்தில்  கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தை இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார்.

அதேபோல் கண்ணன் இயக்கத்தில் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். மேலும் பர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் சுற்றுலா சென்று அங்கிருந்து ஈபிள் கோபுரம் அருகில் அமர்ந்தும் நின்றும் நடந்தும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
பிரான்ஸ் தவிர நெதர்லாந்து நாட்டின் காற்றாலை நகரமான Zaanse Schans & ஆம்ஸ்டர்டம் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கே பிரசித்தி பெற்ற கோலோசியம் அரங்கின் வெளியே எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் வாட்டிகன் நகரில் உள்ள மியூசியத்தை சுற்றிப் பார்த்தார்.

அதன் பின்னர்  ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் தனது தோழிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மோன்ட் செரட் மலையில் அமைந்துள்ள புனித பெனடிக்ட் சர்ஸ்க்கு சென்று சுற்றிய வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு பின்  தற்போது மீண்டும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஐஸ்வர்யா ராஜேஷ் சுற்றுலா சென்றுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற   Louvre Museum அமைந்துள்ள Louvre Pyramid அருகில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Louvre Pyramid , 1981ல் வடிவமைப்பு செய்யப்பட்டு 1988ல் திறக்கப்பட்டது. இந்த வடிவமைப்பை பேய் என்ற ஆங்கிலோ சைனர்  வடிவமைத்துள்ளார். கண்ணாடி மற்றும் உலோகங்களால் ஆன இந்த அமைப்பு 71 அடி (21.6 மீட்டர்) உயரம் கொண்டது. ஒவ்வொரு சதுர பக்கமும் 34 மீட்டர் உயரம் கொண்டது.

Also Read | என்னாச்சு? காலில் காயத்துடன் கட்டுபோட்ட நிலையில் நடிகை பூஜா ஹெக்டே.!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh at Paris Louvre Pyramid Museum France

People looking for online information on Aishwarya Rajesh, Aishwarya Rajesh at Paris, Louvre Pyramid Museum, Paris will find this news story useful.