பாரிஸ் நகரில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. உலகப்புகழ் பெற்ற இடத்தில் இருந்து வெளியிட்ட வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடித்த சீதா ராமம்.. மூன்று நாளில் இம்புட்டு வசூலா! செம தகவல்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில்  ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து  படங்கள் வெளியாக உள்ளன.

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் படமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ்  டிரைவர் ஜமுனா படத்தில்  கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார்.

அதேபோல் கண்ணன் இயக்கத்தில் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் சுற்றுலா சென்று அங்கிருந்து ஈபிள் கோபுரம் அருகில் அமர்ந்தும் நின்றும் நடந்தும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரான்ஸ் சுற்றுலாவை முடித்து கொண்டு  நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

நெதர்லாந்து நாட்டின் காற்றாலை நகரமான Zaanse Schans & ஆம்ஸ்டர்டம் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து புதிய  புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

கடந்த வாரம் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கே பிரசித்தி பெற்ற கோலோசியம் அரங்கின் வெளியே எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் வாட்டிகன் நகரில் உள்ள மியூசியத்தில் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

அதன் பின்னர்  ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் தோழிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மோன்ட் செரட் மலையில் அமைந்துள்ள புனித பெனடிக்ட் சர்ஸ்க்கு சென்று சுற்றிய வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற ARC DE TRIOMPHE இடத்தில்  இருந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஜீன்ஸ் உடையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தோன்றியுள்ளார்.

Also Read | இவங்க தான் பூஜா ஹெக்டே தங்கச்சியா? அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட சூப்பர் டூர் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh at France Paris ARC DE TRIOMPHE

People looking for online information on Aishwarya Rajesh, Aishwarya Rajesh at France will find this news story useful.