சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குனர் ஷங்கரும் முதல் முறையாக இணைந்தது சிவாஜி படத்tதில்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது. சிவாஜி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக முதலில் தேர்வானவர் ஐஸ்வர்யா ராய்தான், ஸ்ரேயா இல்லை என்பது பலருக்குத் தெரியாது. படத்தின் தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சனை ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினர், காரணம் இதற்கு முன் இருவரும் ஜோடியாக நடித்தது இல்லை, மேலும் இருவரின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் மேஜிக்கலாக இருக்கும் என்று நினைத்தனர்.
சந்திரமுகி தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியது, 'இந்தப் படத்துக்காக தயாரிப்பாளர்கள் என்னை அணுகியபோது, முதலில் வடிவேலுவின் தேதிகளைப் பெறுங்கள் என்று அவர்களிடம் சொன்னேன், காரணம் அவர் பிஸியானவர்.
அதன் பின் ஐஸ்வர்யா ராயை அணுகும்படி அவர்களிடம் கேட்டேன். என்னுடைய ஒவ்வொரு படத்திலும் அவருடைய பெயர் ஏன் அடிபடுகிறது என்று நீங்கள் கேட்கலாம், ஐஸ்வர்யாவுடன் டூயட் ஆட விரும்பறேன்னு கூட நினைக்கலாம் ... படையப்பா படத்துல நீலாம்பரி ரோல்ல நடிக்க அவங்களை அணுகினோம்.
அதுக்கப்பறம் பாபாவில் ஒரு கதாபாத்திரத்தை அவருக்கு வழங்கினோம், ஆனால் அவங்க நடிக்காததால், அந்தக் கதாபாத்திரத்தை மாற்றினோம். பின்னர், சந்திரமுகியில் நடிக்கவும் முயற்சிகள் நடந்தது. அவர் அந்த வேடத்தை (ஜோதிகாவின் கதாபாத்திரம்) ஏற்றிருந்தால் இந்தப் படம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இப்போது, சிவாஜிக்காக நாங்கள் ஐஸ்வர்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். " என்று கூறினார்.
ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்தில்தான் ஒருவழியாக ஜோடி சேர்ந்தனர், இந்தப் பட வெற்றியில் கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,