அட.. ஐஸ்வர்யா ராயின் ‘உசுரே போகுது’ ரீகிரியேஷன் பாடலில் நடிச்ச வைரல் பெண்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் திரைப்பட முன்னணி கதாநாயகி ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான இவர் தமிழில் நடித்த இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், குரு உள்ளிட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடையே அவருக்கு மிகப்பெரும் வரவேற்பு பெற்று தந்தது.

Advertising
>
Advertising

ஹாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பிரச்சனை திருமணம் செய்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லைக்கா தயாரிப்பில் இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

முன்னதாக ஐஸ்வர்யா ராய் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த திரைப்படம் ராவணன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பு மிகவும் அழுத்தமாக இருந்ததாக அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற உசுரே போகுது பாடலில் ஐஸ்வர்யா ராய் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் அவரைப் போன்றே அதே பாடலுக்கு ஒரு இளம் பெண் நடித்திருக்கிறார். இந்த பாடல் தற்போது சோனி மியூசிக் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல சின்னத்திரை மற்றும் சோசியல் மீடியா செலிபிரிட்டிகளைக் கொண்டும், ஆர்வமுள்ள பொதுமக்களுள் திறமை மிக்கவர்களைக் கொண்டும் சோனி மியூசிக், சோனி தளத்தின் உரிமம் பெற்ற பாடல்களுக்கு உருவாகும் ரீ-கிரியேஷன் வீடியோக்களை பதிவேற்றி வருகிறது.

அந்த வகையில் தற்போது ராவணன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த அதே கேரக்டரின் உடை & பாவனையில் அதே மாதிரி லொகேஷனில் இளம்பெண் ஒருவர் நடித்திருக்கும் காட்சிகள், தத்ரூபமாக அந்த பாடலை நினைவுகூர வைக்கிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rai usure poguthe song recreation viral video

People looking for online information on Aishwarya rai, Aishwarya Rai Bachchan, AR Rahman, Mani Ratnam, Raavanan will find this news story useful.