PANAMA PAPERS தொடர்பாக சம்மன்!.. அமலாக்கத் துறை விசாரணைக்காக AISHWARYA RAI வருகை?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பனாமா பேப்பர்ஸ் வழக்கில், நடிகை ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai Bachchan) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

Advertising
>
Advertising

வெளிநாடுகளில், கணக்கில் வராத சொத்துகள் இருக்கின்றனவா?  வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகள் உண்மையா? என்பது குறித்ததே இந்த ‘பனாமா பேப்பர்ஸ்’ (Panama Papers,) விசாரணை விவகாரம். முன்னதாக இந்த பட்டியலில் இடம்பெற்ற ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டூர் டேவிட் குன்லாக்ஸன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் பதவிகளையே இழந்துள்ளனர்.

இதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜெர்மனி ஊடகம் ஒன்று, பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பென்செக்கா (Mossack Fonseca) என்கிற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை  வெளியிட்டபோதே இந்த பரபரப்பு உண்டாகத் தொடங்கியது. வெளிநாடுகளில் பிரபலங்கள் மற்றும் பணக்காரர்கள் தங்கள் சொத்துக்கலை நிர்வகிப்பதற்கும், வாங்குவதற்கும் உதவி செய்வதே இந்த பொன்சேகா நிறுவனத்தின் பணியாகும்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய்  விஷயத்தில் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டபோது, நடிகை ஐஸ்வர்யா ராய் கால அவகாசம் கோரியிருந்தார். இதனை பொருத்தவரை, வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம் 1999-ன் கீழ் ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

இதனிடையே இன்று ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராகி அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சம்மன் அனுப்ப பட்டதுடன், அதே சமயம், இது தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்ததாகவும், அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் வருகை தருவதாகவும் தெரிகிறது. 

இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொட்ர்பாக 300 இந்தியர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rai Bachchan Arrives at ED Office Panama Papers Case

People looking for online information on Aishwarya rai, Aishwarya Rai Bachchan, Delhi aishwarya rai, Enforcement Directorate, Mossack Fonseca, Panama Papers, Panama Papers Aishwarya Rai, Panama Papers Case will find this news story useful.