LOVE MARRIAGE AH? ARRANGE MARRIAGE AH? "பொன்னியின் செல்வன் பூங்குழலி" ஐஸ்வர்யா லெஷ்மி சொன்ன வைரல் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். முதல் பாகமான “பொன்னியின் செல்வன்  -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்தது.

இந்த படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி நடித்துள்ளார். கோடியக்கரை படகோட்டி பெண்ணான பூங்குழலி,  வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்து செல்லும் கதாபாத்திரம் இது. பூங்குழலி இளவரசர் அருள்மொழிவர்மனிடம் காதல் கொள்வது போலவும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்துள்ளது. இந்த பூங்குழலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது விஷ்ணு விஷால் & 'பொன்னியின் செல்வன் பூங்குழலி'  ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் கட்டா குஸ்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா லெஷ்மியிடம் திருமணம் குறித்து உங்களுக்கு  காதல் திருமணத்தில் ஆர்வமா? நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் ஆர்வமா? என கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா லெஷ்மி, "திருமணத்திலேயே ஆர்வமில்லை" என்று பதில் அளித்துள்ளார்.

விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி திரைப்படம் குஸ்தியைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஷணு விஷாலின் விஷணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ’RT டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்குகிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரசன்னா ஜி கே எடிட்டராக பணியாற்றுகிறார். கலை இயக்கத்தை உமேஷ் மேற்கொள்கிறார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் சகோதரர்கள் வடிவமைத்து உள்ளனர்.

இந்த படம் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Lekshmi Answered about Her Marriage

People looking for online information on Aishwarya Lekshmi, Gatta Kushti, Ponniyin Selvan, PS1 will find this news story useful.