அந்த மேஜிக் புரிய ஆரம்பிக்கும்… EXCITEMENT-ல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள முசாபிர் ஆல்பம் விரைவில் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

வெங்கட்பிரபு அசோக் செல்வன் கூட்டணியின் மன்மதலீலை…. வெளியான சென்ஸார் தகவல்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சினிமா ஆர்வம்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அந்த தமபதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பாக தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர மனமொத்து தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து தனுஷ் தான் ஒப்புக்கொண்ட படங்களில் கவனம் செலுத்திவர, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது முசாபீர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியீட்டுக்கு தயாராக வைத்துள்ளார்.

மருத்துவமனையில் ஐஸ்வர்யா

சில வாரங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கொரோனா பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு அவர் மகளிர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

முசாபீர் ஆல்பம்

ஐஸ்வர்யாவின் இயக்கத்தில், காதலர் தினத்திற்காக ரொமான்டிக் பாடல் ஒன்று தயாராகி வருவதாகவும், இதற்கான ஷூட்டிங் ஜனவரி 25-ஆம் தேதி துவங்கி 27-ஆம் தேதி வரை நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த ஆல்பம் பாடல் வெளியாவதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடலின் படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் ஐதராபாத்தில் ஐஸ்வர்யா உரையாடலில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு முடிந்து டீசர் ஒன்றை வெளியிட்டு இருந்தனர். நான்கு மொழிகளில் உருவாகும் இந்த ஆல்பத்தின் தமிழ் வெர்ஷனை அனிருத் பாடியுள்ளார். அன்கித் திவாரி இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

மேஜிக் புரியும் தருணம்

இந்நிலையில் இந்த ஆல்பம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருப்பது ஒரு பக்கம் என்றால் அதன் இயக்குனரே ஆவலாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் ’ நீங்கள் அதை மீண்டும் பார்க்கும்போது, ஒரு மேஜிக் உங்களுக்கு புரிவதை உணர்வீர்கள். நீங்கள் உருவாக்கியதில் ஒரு புதிய உலகம் இருப்பது தெரியவரும். நாங்கள் உருவாக்கி இருப்பதை உங்களுக்கு காட்டுவதற்காக காத்திருக்க முடியவில்லை. மற்றும் மறுபடியும் படப்பிடிப்புத் தளத்துக்கு செல்வதற்காகவும் காத்திருக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த ரஹ்மான்… அதுக்கு கொடுத்த கேப்ஷன்தான் செம்ம!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya dhanush excited on her next album musafir

People looking for online information on Aishwarya Dhanush, Aishwarya Rajinikanth, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், முசாபிர் ஆல்பம், Musafir, Next album will find this news story useful.