LIGER படத்தின் ரிலீஸ்.. VJD & அனன்யா பாண்டேவுக்காக பூஜை செய்த விஜய் தேவரகொண்டாவின் அம்மா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டேக்காக விஜய் தேவரகொண்டாவின் அம்மா பூஜை செய்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | ஆஸ்கார் விருது பரிந்துரைப் போட்டியில் நானி & சாய் பல்லவி நடித்த ஷ்யாம் ஷிங்கா ராய்!

பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் இந்தியத் திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் இந்த, அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

லைகர் திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை முன்னிட்டு படக்குழு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் அம்மா படம் வெற்றி பெற சிறப்பு பூஜை நடத்தினார். இப்பூஜையில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே கலந்து கொண்டனர். புனித கயிறை இருவருக்கும் கையில் விஜய்யின் தாயார் கட்டி விட்ட புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர்  ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லைகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படம் ஏற்கனவே சென்சாராகி உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும்  படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் என்றும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தில் 7 சண்டை காட்சிகளும் 6 பாடல் காட்சிகளும் உள்ளன என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Also Read | AK61 லுக்கில் அஜித்.. பிரபல Technician பகிர்ந்த லேட்டஸ்ட் Post! சும்மா தெறி

தொடர்புடைய இணைப்புகள்

Ahead of Liger Release Special Pooja was Held by VijayDeverakonda Mother

People looking for online information on Liger, Pooja, Vijay Deverakonda, VijayDeverakonda Mother will find this news story useful.